‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டிரெய்லர் குறித்து முக்கிய அப்டேட்..!
விக்ரம் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்தப் படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்து வர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது.

அதன்பின்னர் விக்ரம், கெளதம் இருவருமே தங்களது அடுத்தடுத்த படங்களில் பிசியானார்கள். இதனிடையே மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்தார். பல பிரபலங்கள் நடித்து வெளியான இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த வருட இறுதியில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் வேலைகள் மீண்டும் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் சென்சாருக்கு சென்ற நிலையில் தற்போது சென்சார் பணிகள் முடிந்து உள்ளது. 2 நிமிடம் 38 வினாடிகள் கொண்ட டிரெய்லர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 - cini express.jpg)