மூன்றாவது குழந்தை பெற்றால் சிறைத் தண்டனை: கங்கனா சர்ச்சை..!

இந்தியாவில் மூன்றாவது குழந்தை பெறுபவர்களுக்கு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்பட வேண்டும் என நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளது சமூகவலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூகம், அரசியல், சினிமா என எதுவாக இருந்தாலும் கருத்து என்ற பெயரில் எதையாவது உளரும் கங்கனா ரணாவத் மக்கள்தொகை குறித்து வெளிப்படுத்தியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால், அதை கட்டுப்படுத்தும் நோக்கில் மூன்றாவது குழந்தையை பெற்றுக்கொள்ளும் பெற்றோர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் அல்லது அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று கங்கனா கருத்து தெரிவித்திருந்தார்.
We need strict laws for population control, enough of vote politics it’s true Indira Gandhi lost election and later was killed for taking this issue head on she forcefully sterilised people but looking at crisis today at least there should be fine or imprisonment for third child.
— Kangana Ranaut (@KanganaTeam) April 20, 2021
உடனடியாக இதற்கு சமூகவலைதளங்களில் விவாதங்கள் உருவான நிலையில், பிரபல நடிகை சலோனி கவுர் என்கிற நகைச்சுவை நடிகை கங்கனா உடன் பிறந்தவர்கள் மூன்று பேர் என்று நக்கலாக கருத்து பதிவிட்டு இருந்தார்.
இதனால் வெகுகுண்டு எழுந்த கங்கனா, ”என் தாத்தாவுடன் பிறந்தவர்கள் 8 பேர். அதில் பலரும் இறந்து போனார்கள். காட்டில் வசித்ததால் ஆபத்தும் அதிகமாக இருந்தது. அதே நடைமுறையை இப்போது பொருத்திப் பார்க்க முடியுமா? காலத்திற்கு ஏற்றார் போல நாம் மாறிக்கொள்ள வேண்டும். மக்கள்தொகையை கட்டுப்படுத்த சீனாவில் இருப்பது போன்ற கடுமையான சட்டங்கள் இந்தியாவிலும் தேவை”
என்று சலோனி கவுர் பதிவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.