இன்னும் 3 நாட்களில் அண்ணாத்த டீசர்- சர்பரைஸ் கொடுத்த படக்குழு..!

 
அண்ணாத்த

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘தர்பார்’ படம் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை. முன்னதாக வெளியான ‘காலா’ படமும் வசூல் வேட்டை நடத்தவில்லை. இதனால் ரசிகர்கள் அவரிடமிருந்து ஒரு அதிரடி மெஹா ஹிட் படத்தை எதிர்நோக்கி ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இதை உணர்ந்துகொண்ட ரஜினிகாந்த், ரசிகர்களுக்காக நடித்துள்ள படம் தான் ‘அண்ணாத்த’. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. மீனா, குஷ்பு, நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நாயகிகளாக நடித்துள்ளனர். 

ஏற்கனவே அண்ணாத்த படத்துக்காக டி. இமான் இசையமைத்த இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுவிட்டன. மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடைசியாக பாடிய ‘அண்ணாத்த அண்ணாத்த’ பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியான ‘சாரக் காற்றே’ பாடலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


ஏற்கனவே அண்ணாத்த படம் இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு வரும் நவ. 4-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இதுவரை படத்தின் டீசர் வெளியாகவில்லை. இதை உணர்ந்துகொண்ட தயாரிப்பு நிறுவனம் தற்போது டீசர் வெளியிட்டுக்கான அப்பேட்டை வெளியிட்டுள்ளது

அதன்படி அண்ணாத்த பட டீசர் வரும் 14-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது. டீசர் அப்டேட்டை முன்னிட்டு படத்தில் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தின் புதிய போஸ்டரையும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு படத்தை ஆவலுடன்  எதிர்நோக்கியுள்ள ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

From Around the web