வெறும் 77 நாட்களில் ரூ. 185 கோடி சம்பாதித்த பிரபல டிவி நடிகை..! யார் தெரியுமா..?

 
வெறும் 77 நாட்களில் ரூ. 185 கோடி சம்பாதித்த பிரபல டிவி நடிகை..! யார் தெரியுமா..?

ஓராண்டு காலம் நடித்து சம்பாதிக்க வேண்டிய பணத்தை வெறும் 77 நாட்களில் அதுவும் டிவி நிகழ்ச்சியில் தோன்றி ரூ. 185 கோடி வரை சம்பாதித்து வியக்க வைத்த பிரபல நடிகையிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று உலகையே புரட்டிப்போட்டுள்ள சூழலில் சினிமா தொழிலும் மிகுந்த பாதிப்பை சந்தித்தது. சினிமாவை நம்பி இருப்பவர்களின் கதி கேள்விக்குறியாகியுள்ள நிலையில், வெறும் டிவி நிகழ்ச்சி மூலம் ரூ. 185 கோடி வரை சம்பாதித்து உலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளார் சீன நடிகை ஜெங் ஷுவாங்க்.

ஓராண்டு முழுவதும் இடைவிடாது நடித்தாலும் ஈட்டமுடியாத தொகையை வெறும் 77 நாட்களில் நடித்து அவர் ஈட்டியுள்ளது அந்நாட்டினிரடையே மிகுந்தா வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சீன அரசு வருமான வரித்துறையை ஏவி விட்டுள்ளது. அவர் வரி கட்டாமல் வரி ஏய்ப்பு செய்தாரா என்கிற கோணத்தில் விசாரணை முடக்கிவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த நடிகை ஜெங் ஷுவாங்க் சீன அரசின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும், தன்னிடம் இருக்கும் வருமான வரி தாக்கல் கணக்கில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த விவகாரம் சீனாவில் சூடு பிடித்துள்ளது. 

From Around the web