சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில்... மாஸாக குத்தாட்டம் போட்ட விஜய்சேதுபதி!!

 
1

‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதிக்கு நல்ல நேரம். அவர் நடித்த ஆரம்பகால படங்கள் வெற்றி பெற்றதால், அதிர்ஷ்ட காற்று அவர் பக்கம் வீச ஆரம்பித்தது.

அதை அவர் பயன்படுத்திக்கொண்டார். தற்போது அதிக படங்களை கையில் வைத்திருக்கும் கதாநாயகன், இவர்தான். சினிமாவில் எந்த வேடம் கிடைத்தாலும் நடிக்கும் அவர், ‘சின்னத்திரை’ நிகழ்ச்சிகளையும் புறக்கணிப்பதில்லை.

புகழ்பெற்ற மாஸ்டர் செஃப் சமையல் நிகழ்ச்சியை வேறு இவர் தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியின் ஷுட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. சமீப நாட்களாக இது பற்றிய ஃபோட்டோக்களும், வீடியோக்களும் சோஷியல் மீடியாக்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சினிமாவில் படு பிஸியாக இருக்கும் போதே டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி சின்னத்திரைக்கு வந்திருப்பது ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது மாஸ்டர் செஃப் செட்டில் அவர் நடனம் ஆடிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

சென்னை லோக்கல் மியூசிக்கிற்கு கரகாட்ட கலைஞர்கள் சிலருடன் சேர்ந்த மாஸாக குத்தாட்டம் போட்டுள்ளார் விஜய் சேதுபதி. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அவர் போட்ட குத்தாட்ட வீடியோ, ஃபோட்டோக்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே விஜய் சேதுபதியின் படங்கள், மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி எப்போது வரும் என காத்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு இந்த வீடியோ செம கொண்டாட்டமாக உள்ளது.


 

From Around the web