அந்த வீடியோவில் உள்ளது நான் இல்லை - அதிரடியாக போலீஸ் புகார் கொடுத்த ஓவியா!

2010 ஆம் ஆண்டு சத்குணம் இயக்கத்தில் விமல் ஹீரோவாக நடித்த களவாணி படத்தில் ஓவியா ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதன்பின்பு மெரினா, மதயானை கூட்டம், மூடர்கூடம், முத்துக்கு முத்தாக, கலகலப்பு போன்ற படங்களில் நடித்தார்
எனினும் ஓவியாவுக்கு திடீரென பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. இதன் காரணத்தினால் பிக் பாஸ் முதலாவது சீசனில் போட்டியாளராக பங்குபற்றினார். அங்கு இவரது நடை, உடை,பேச்சு, சுட்டித்தனம் என்பவற்றுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவானது.
இதை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவியும் என நினைத்த ஓவியாவுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. ஒரு சில படங்களில் நடித்த போதும் அது தோல்வியை தான் தழுவியது. இப்படி இருக்க நேற்றிலிருந்து ஓவியாவின் வீடியோ என ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. அதனை நெட்டிசன்ஸ் பலரும் ட்ரெண்டாக்கிவருகின்றனர். அதற்கு உகந்த பதிலடியும் ஓவியா கொடுத்து இருந்தார்.
இந்த நிலையில், தற்போது சமூக வலைத்தளத்தில் பகிரப்படும் போலி வீடியோ தொடர்பில் கேரளா சைபர் கிராமில் போலீஸ் புகார் செய்துள்ளார் நடிகை ஓவியா. இந்த தகவல் தற்போது பேசுப் பொருளாக காணப்படுகின்றது.
மேலும் ஓவியா அதில் உள்ளது தான் இல்லை என ஒருவருக்கு பதிலளித்துள்ளமையும் தற்போது வெளியாகியுள்ளது. எனவே குறித்த வீடியோ ஓவியாவின் வீடியோ தானா இல்லையா என்பது தொடர்பில் சலசலப்பு நிலவுகின்றது. எனினும் அதுதான் இல்லை என்று ஓவியாவே சொல்லி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.