இந்த லைஃப்ல நாம யாரை கண்மூடித்தனமா நம்புனமோ அவங்க தான்... எமோஷனலாக பேசிய மனோஜ்..!
விஜய் டிவி சீரியல்களில் தற்போது டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருவது சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில், முத்துவின் அண்ணன், மனேஜ் கேரக்டரில் நடித்து வருபவர் நடிகர் ஸ்ரீதேவா. இந்த சீரியலில் இவர் வில்லனா அல்லது காமெடி நடிகரா என்ற குழப்பம் நீடித்து வந்தாலும், இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
சீரியல் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகர் ஸ்ரீதேவா சமீபத்தில் வெளியான ஆலன் என்ற படத்திலும் நடித்திருந்தார். மேலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் ஸ்ரீதேவா சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
அதேபோல் சிறகடிக்க ஆசை சீரியல் ஷூட்டிங்கில் என்ன நடக்கிறது என்பது குறிதது அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த வாரம் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில், ரோஹினி சிறையில் இருப்பது போன்று இருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அடுத்து இந்த சீன் தான் வரப்போகிறதா என்று கேள்விகளை எழுப்பி வந்தனர். இதனிடையே தற்போது சோகமாக பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "யாரெல்லாம் இந்த லைஃப்ல நாம கண்மூடித்தனமா நம்புனமோ அவங்க தான் யாரையும் நம்ப கூடாதுன்னு பாடத்தை கற்றுக் கொடுத்துட்டு போறாங்க.." என்று பேசியிருக்கிறார். ஸ்ரீதேவா எமோஷனலாக பேசியுள்ள இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், இவருடைய வாழ்க்கையில் நடந்த ஏதேனும் சம்பவத்தை குறிப்பிடுகிறாரா? அல்லது சீரியலில், ரோகினி, செய்ததை தெரிந்துகொண்டு, இப்படி பேசுகிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.