வர்மன் சார் படத்துல போலீசை மிரட்டலாம்... நிஜத்துல பண்ணா எப்படி சார்..! 

 
1

மோகன்லால் நடித்த மாந்த்ரீகம் படத்தின் மூலம் அறிமுகமானவர் விநாயகன். 1995ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தில் மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் திறமையை நிரூபித்த விநாயகனுக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் குவிந்தன. இதன் காரணமாக மல்லுவுட்டில் முன்னணி நடிகராக உயர்ந்தார். முன்னதாக, மலையாளத்தில் தனது திறமையை நிரூபித்ததன் மூலம் ஹிந்தி மொழியிலும் அறிமுகமானார் விநாயகன்.

 2006ஆம் ஆண்டு வெளியான ஆஷத்யூடு என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகி அங்கும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். விநாயகன் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிக்கொள்பவர். சமீபத்தில்கூட ஒரு பெண் பத்திரிகையாளரை அவர் தரக்குறைவாக பேசியதாக சர்ச்சை எழுந்தது.

அதுமட்டுமின்றி பல பெண்களுடன் அவர் உடல் ரீதியாக தொடர்பில் இருந்ததாகவும் அதனால் அவருக்கும் அவரது மனைவிக்கும் பிரச்னை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், “எனக்கும் எனது மனைவி பபிதாவுக்கும் இருந்த அனைத்து திருமண உறவுகளும், சட்ட உறவுகளும் முடிவுக்கு வருகின்றன” என குறிப்பிட்டிருந்தார்.

மலையாளம், ஹிந்தி, தெலுங்கில் நடித்த விநாயகன் தமிழில் திமிரு படத்தின் மூலம் இண்ட்ரோ ஆனார். விஷால் நடித்த அந்தப் படத்தில் அவரது அண்ணியான ஸ்ரேயா ரெட்டிக்கு துணை நிற்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மாற்றுத்திறனாளியாக நடித்த அவர் நடிப்பில் மட்டுமின்றி தனது வசன உச்சரிப்பின் மூலமும் கவனம் ஈர்த்தார். அதைத் தொடர்ந்து சிலம்பாட்டம், எல்லாம் அவன் செயல், மரியான், ஜெயிலர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், விநாயகன் நன்றாக குடித்துவிட்டு எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்துக்குள் சென்று ரகளை செய்திருக்கிறார். தற்போது அதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விநாயகனை காவல் துறையினர் அரெஸ்ட் செய்திருக்கிறார்கள். அவர் கைது செய்யப்பட்டது கேரளா திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.


 


 

From Around the web