இந்தியன் 2 படப்பிடிப்பு நிறைவு- இனி சென்னையில் மட்டும்..!!

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. இனி சென்னை உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் மட்டும் சில காட்சிகள் எடுக்கப்பட வேண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
 
kamal

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் படம் ‘இந்தியன் 2’. இது 1996-ம் ஆண்டு வெளியான இந்தியன் முதல் பாகத்தின் தொடர் பாகமாக வெளிவரவுள்ளது. இந்த படத்தில் கமலுடன் சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தியாவில் சென்னை மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட இடங்களிலும் வெளிநாட்டில் தென் ஆஃப்ரிக்காவிலும் இப்படத்துக்கான ஷூட்டிங் நடந்து வந்தது. கடந்த மாதம் தென் ஆஃப்ரிக்கா நாடுகளில் நடந்த ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு படக்குழு இந்தியா திரும்பியது. 

இதையடுத்து குஜராத் மாநிலம் சூரத்தில் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்தது. தற்போது அந்த பணிகளும் முடிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இத்துடன் வெளிப்புற படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் இந்திய 2 படக்குழு முடித்துக்கொண்டுள்ளது. இனிமேல் சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் மட்டுந்தான் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.

அதுவும் ஒரு சில காட்சிகள் மட்டும் படமாக்கப்படவுள்ளது. அதற்கு பிறகு இந்தியன் 2 படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது கதாபாத்திரம் தொடர்பான தகவலை படக்குழு மிகவும் ரகசியமாக வைத்துள்ளது.
 

From Around the web