இந்தியன் 2 படத்தின் உரிமத்தை கைபற்றிய​ பிரபல நிறுவனம்!

 
1

இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கி சில பிரச்னைகளின் காரணமாக ஷூட்டிங் தடைப்பட்டது. அதன் பின் மீண்டும் 2020ஆம் ஆண்டு முழுவீச்சில் ஷுட்டிங் தொடங்கியது. ஆனால் 2020ஆம் ஆண்டு தொடங்கி பரபரப்பாக நடந்துவந்த ஷூட்டிங்கில் கிரேன் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஷங்கரின் உதவி இயக்குநர்கள் உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது மிகப்பெரும் விவாதத்தை ஏற்படுத்திய சூழலில் ஷூட்டிங் மீண்டும் நிறுத்தப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியன் 2 கிடப்பில் போடப்பட்டது.

இதனால் இந்தியன் 2 படம் பெரும்பாலும் கைவிடப்பட்டுவிட்டது என்றே பலராலும் கருதப்பட்டது. கமல் ஹாசனும் விக்ரம் படத்தில் நடித்து மெகா ஹிட்டை கொடுத்துவிட்டார். இதனால் இந்தியன் 2 நிச்சயம் மீண்டும் தொடங்கப்படாது என்பது பலரின் பேச்சாக இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் இந்தியன் 2 படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனமும் லைகாவுடன் இணைந்து தயாரிக்க முன் வந்தது. இதனையடுத்து இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் மீண்டும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. சென்னை, ஹைதராபாத், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது.

இதனையடுத்து தைவான், தென் ஆப்பிரிக்கா, சென்னை, சூரத் என பல இடங்களில் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. அனிருத் இசையமைக்கிறார். தில் சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. படத்தின் ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் கமல் ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு சில மாதங்களுக்கு முன்பு இந்தியன் 2 ட்ரெய்லர் வெளியானது. ட்ரெய்லருக்கு ரசிகர்களில் பலர் வரவேற்பு கொடுத்தாலும் சிலர் தங்களது விமர்சனத்தை முன்வைத்தனர். வழக்கமான ஷங்கர் படம் போல் இருக்கும் என்பதை ட்ரெய்லர் உறுதி செய்வதாக அவர்கள் ஓபனாகவே கூறினர்.

படமானது மார்ச் அல்லது ஏப்ரலில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்த சூழலில் படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி இந்தியன் 2 படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளின் ஓடிடி உரிமை நெட்ஃப்ளிக்ஸிடம் சென்றிருக்கிறது. ஏற்கனவே லைகா தயாரித்துவரும் விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமையையும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.


 


 

From Around the web