இந்தியன் 2 பட ரிலீஸுக்கு தேதி குறிச்சாச்சு- விரைவில் அறிவிப்பு..!!
தமிழில் 1996-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சுகன்யா, நெடுமுடி வேணு, மனீஷா கொய்ராலா, கவுண்டமணி, ஊர்மிளா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் இந்தியன். மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மூன்றாவது முறையாக பெற்றார் கமல்ஹாசன்.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் 27 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தயாராகி வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு இதற்கான ஷூட்டிங் பணிகள் துவங்கின, ஆனால் படப்பிடிப்பு சமயத்தில் நேர்ந்த கோரமான விபத்து, கொரோனா காலக்கட்டம் மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துக்கும் ஷங்கருக்கும் இடையிலான வழக்கு உள்ளிட்ட பிரச்னைகளால் ஓராண்டுக்கும் மேல் படம் கிடப்பில் போடப்பட்டது.

நீதிமன்றம் தலையிட்டு தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஷங்கருக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் சமரச முடிவு எடுக்கப்பட்ட பின்னர், கடந்த சில மாதங்களாக மீண்டும் இந்தியன் 2 பட ஷூட்டிங் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. தற்போது படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. இம்மாத இறுதியுடன் ஒட்டுமொத்த ஷூட்டிங் பணிகளும் முடிவடைகிறது.

அதை தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், கிராஃபிக்ஸ் காட்சிகள் வடிவமைப்பு, ஒலி கலவை உள்ளிட்ட பணிகள் துவங்கும். இந்நிலையில் இந்தியன் 2 படத்தை வரும் 2024 பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதற்கேற்றவாறு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தீவிரம் காட்ட படக்குழு முனைப்பு காட்டி வருகிறது.
 - cini express.jpg)