’இந்தியன் 2’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு..! 

 
1

 ’இந்தியன் 2’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்ததால் சில ஆண்டுகள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கொரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்பதும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தால் ஒருவர் மரணம் அடைந்ததன் காரணமாகவும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்பது தெரிந்ததே.


 

இந்த நிலையில் லைக்கா மற்றும் ஷங்கர் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்த நிலையில் ஒரு வழியாக இந்த வழக்கு சமரசமாகி அதன் பின்னர் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்நிலையில் தற்போது இந்த படம் ரிலீஸ் கட்டத்தை நெருங்கி உள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் தனது சமூகவலைதளத்தில் 'இந்தியன் 2’ படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த படத்தின் சிங்கிள் பாடல் நாளை மறுநாள் வெளியாகும் என்ற ட்விஸ்ட் வைத்துள்ளதை அடுத்து கமல் ரசிகர்களுக்கு டபுள் விருந்து கிடைத்துள்ளதாக கருதப்படுகிறது. 

ஏற்கனவே ஜூன் 27ஆம் தேதி கமல்ஹாசன் நடித்த ’கல்கி 2898 ஏடி’ படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ’இந்தியன் 2’ படமும் ரிலீஸ் ஆக உள்ளதை அடுத்து அடுத்தடுத்து கமல் ரசிகர்களுக்கு உற்சாகம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

From Around the web