இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் துவங்குகிறது..!

 
கமல்ஹாசன்

இந்தியன் 2 திரைப்படத்துக்கான ஷூட்டிங் மீண்டும் துவங்கவுள்ளதாக, கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 1996-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. கமல்ஹாசன், சுகன்யா, மனிஷா கொய்ராலா, கவுண்டமணி உள்ளிட்டோர் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் நடித்தற்காக கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மூன்றாவது முறையாக பெற்றார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் துவங்கப்பட்டது.

ஆனால் கடந்தாண்டு ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக படப்பிடிப்பு அப்படியே நின்றுபோனது. சுமார் இரண்டாண்டுகளாக இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெறாமல் இருந்தன.

தற்போது லைக்கா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஷங்கருக்கு இடையே நிலவிய பிரச்னையில் தீர்வு காணப்பட்டுள்ளது. அதனால் வருகிற டிசம்பர் மாதம் இந்தியன் 2 படப்பிடிப்பு ஷூட்டிங் மீண்டும் துவங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

From Around the web