இந்தியன் தாத்தாவின் "இந்தியன் 2 டிரைலர்" எப்போது ரிலீஸ் தெரியுமா?

 
1

ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிக்கும் திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் உடன் சித்தார்த், ரகுல் பிர்த் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இதற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்ற கதறல்ஸ், பாரா போன்ற பாடல்கள் ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது. அண்மையில் தான் இதன் இசை வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிலையில், இந்தியன் 2 படத்தின் டிரைலர் சென்சார் செய்யப்பட்டதாகவும் எதிர்வரும் ஜூன் 24 ஆம் தேதி இதனை தயாரிப்பு நிறுவனம் வெளியிடலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

From Around the web