இந்தியன் தாத்தா இஸ் பேக்..!  அடுத்த மாசம் கன்ஃபார்மா களமிறங்குவார்!

 
1

 லைக்கா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த படத்தில் கமலஹாசன் உடன் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பாபி சிம்ஹா, சமுத்திரகனி மற்றும் சித்தார்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார.

சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் ரிலீசுக்கும் தயாராகிவிட்டது.

அண்மையில் தான் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து, இதன் இசை வெளியீட்டு விழா ஜூன் முதலாம் திகதி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

மேலும் இந்த படத்தில் இருந்து வெளியான கதறல்ஸ் பாடலின் வீடியோவும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பலரின் கவனத்தை ஈர்த்து இருந்தது.

இந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12ம் தேதி வெளியாகும் என அதிகார்வபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் கமலின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள்.

1

From Around the web