வசந்தபாலன் இயக்கும் அநீதி..!

 
அர்ஜுன் தாஸ்

வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன் நடித்து வரும் படத்துக்கு ‘அநீதி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. 

இயக்குநர் வசந்தபாலன் தன்னுடைய பள்ளி நண்பர்களுடன் இணைந்து தயாரித்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கான தலைப்பு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி படத்துக்கு ‘அநீதி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதற்காக உருவாக்கப்பட்டுள்ள டைட்டில் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் ஆகியோர் சமூகவலைதளங்களில் வெளியிட்டனர்.

இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படம் 2022-ம் ஆண்டு திரைக்கு வரவுள்ளது. 

From Around the web