வைரலாகும் பாக்கியலட்சுமி மருமகளுடன் ஆட்டம் போடும் இன்ஸ்டா ரீல் வீடியோ !
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்றுக் கொண்டிருக்கிறது பாக்யலஷ்மி சீரியல். கணவர் பிரிந்த நிலையில் தனது குடும்பத்தினருக்காக போராடும் பெண்ணின் கதைதான் இந்த சீரியல். தற்போது சமையல் பிசினஸ் செய்யும் பாக்யா, அதன் மூலம் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றுகிறார்.
தற்போதைய கதைப்படி தனது இளைய மகனான எழில் கணவனை இழந்த அமிர்தாவை காதலித்து வருகிறார். இது குடும்பத்தினருக்கு பிடிக்காத நிலையில் எழிலுக்கு வேறு திருமணம் செய்ய நினைக்கிறார்கள். ஆனால் தனது மகனுக்கு அமிர்தாவையே திருமணம் செய்து வைத்து பிடித்த வாழ்க்கை கொடுக்கிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் கோவத்தில் கொந்தளிக்கின்றனர். இப்படி பரபரப்பான கட்டத்தில் சீரியல் நகர்ந்து வருகிறது.
இந்நிலையில் 'பாக்யலட்சுமி' சீரியலில் அமிர்தாவாக நடித்து வரும் ரித்திகா இன்ஸ்டாகிராமில் ரீல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சுசித்ரா மற்று ரித்திகா ஆகிய இருவரும் நடனம் ஆடுகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.