மகாமுனி படத்திற்காக சர்வதேச விருது வென்ற நடிகை..!

 
மஹிமா நம்பியார்
ஆர்யா நடிப்பில் வெளியான மகாமுனி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தற்காக பிரபல நடிகைக்கு ஸ்பெயின் நாட்டில் சரவ்தேச விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு சாந்தகுமார் இயக்கத்தில் வெளியான படம் ‘மகாமுனி’. முன்னதாக இவர் இயக்கத்தில் 2011-ம் ஆண்டு வெளியான ’மவுனகுரு’ நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் திரையரங்குகளில் வெளியான பிறகு படத்திக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. எனினும் விமர்சகர்கள் வட்டத்தில் படத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. அதை தொடர்ந்து பல சர்வதேச விழாக்களுக்கு படம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஸ்பெயினில் நடந்த மேட்ரிட் சர்வதேச திரைப்பட விழாவில் மகாமுனி படத்துக்கு ரசிகர்களிடையே பாராட்டுக்கள் குவிந்தன. இப்படத்தில் நடித்திருந்த மகிமா நம்பியாருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இயக்குநர் சாந்த குமார், ஆர்யா, இந்துஜா, தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜா உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். ரசிகர்களும் இவருக்கு வாழ்த்து கூறி வருகின்றன

From Around the web