சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற நயன்தாரா படம்..!

 
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற நயன்தாரா படம்..!

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து தயாரித்துள்ள ‘கூழாங்கல்’ படத்திற்கு நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற பிரபலமான திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்கிற நிறுவனத்தை சொந்தமாக வைத்துள்ளார். இதில் அவருடைய காதலியும் நடிகையுமான நயன்தாரா பங்குதாரராக உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து ’கூழாங்கல்’ என்கிற படத்தை தயாரித்தனர்.

இதை பி.எஸ். வினோத் ராஜ் என்பவர் இயக்கினார். இந்த படம் நெதர்லாந்து நாட்டில் நடந்த ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. தற்போது இந்த படத்திற்கு சிறந்த படத்துக்கான விருது வழங்கப்பட்டது.

நெதர்லாந்து நாட்டில் நடக்கும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் மிகவும் புகழ்பெற்றதாகும். அங்கு சிறந்த படம் பிரிவில் போட்டியிட்டு முதல்முறையாக விருது வென்ற தமிழ் படம் என்கிற சாதனையை படைத்துள்ளது ‘கூழாங்கல்’. 

குடிகார தந்தைக்கும் மகனுக்குமான உறவு குறித்து பேசும் இந்த படம் அடுத்ததாக நியூயார்க் டைரக்டர்ஸ் நியூ திரைப்பட விழாவிலும் பங்குகொண்டது. அங்கு போட்டி பிரிவில் திரையிடப்பட்ட இந்த படம் சிறந்த படத்துக்கான விருதை வென்றுள்ளது. 
 

From Around the web