மகாமுனி படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்- இயக்குநர் தகவல்..!

 
மகாமுனி

ஆர்யா நடிப்பில் வெளியான  ‘மகாமுனி’ திரைப்படம் சர்வதேசளவில் விருதுப் போட்டிக்கு தேர்வாகியுள்ளதாக படத்தை இயக்கிய சாந்தகுமார் தெரிவித்துள்ளார். 

அருள்நிதி, இனியா நடிப்பில் வெளியான ‘மவுனகுரு’ படம் மூலம் கவனமீர்த்தவர் இயக்குநர் சாந்தகுமார். அதை தொடர்ந்து ஆர்யா மற்றும் இந்துஜா நடிப்பில் ’மகாமுனி’ படத்தை துவங்கினார். இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.

கடந்த 2019-ம் ஆண்டு வெளியான இந்த படம் எதிர்பார்த்தளவில் வரவேற்பை பெறவில்லை. எனினும் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆர்யா மற்றும் இந்துஜாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

இந்நிலையில் இந்த படம் தொடர்பாக கருத்து கூறியுள்ள இயக்குநர் சாந்தகுமார், மகாமுனி திரைப்பட பல்வேறு பிரிவுகளில் 9 சர்வதேச விருதுகளை வென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இரண்டு முக்கிய சர்வதேச விருதுக்கான போட்டியில் தேர்வாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 

From Around the web