நடிகர் சூர்யாவை மிரட்டுவது கோழைத்தனம்: மார்க்கிஸ்ட் கட்சி கண்டனம்

 
நடிகர் சூர்யா

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் சூர்யாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பாஜக இளைஞரணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது கோழைத்தனத்தின் வெளிப்பாடு என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் புதிய ஒளிப்பதிவு சீர்திருத்த சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் நடிகர் சூர்யா. அவரை தொடர்ந்து நடிகர்கள் கார்த்தி, விஷால், இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன், ராஜூமுருகன் உள்பட பலரும் சமூகவலைதளங்கள் வாயிலாக புதிய ஒளிப்பதிவு சீர்திருத்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்நிலையில் தொடர்ந்து மத்திய அரசின் நீட்தேர்வு, புதிய கல்விக் கொள்கை, ஒளிப்பதிவு சீர்திருத்த மசோதா உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு சூர்யா எதிர்ப்பு தெரிவித்து வருவதற்கு பாஜக இளைஞர் அணி கூட்டத்தில் அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் சூர்யா மீது கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடிகர் சூர்யாவுக்கு எதிராக தீர்மானம் போட்டு மிரட்டுவது கோழைத்தனம் என தெரிவித்துள்ளது. நடிகர் சூர்யாவை மிரட்டும் நோக்கில் தீர்மானம் போட்ட பாஜகவின் செயல் அப்பட்டமான கோழைத்தனத்தின் வெளிப்பாடு என்றும் நீட், சினிமா சட்ட திருத்தம் பற்றிய விமர்சனங்களை நியாயமான முன்வைக்கிறார் சூர்யா என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் சூர்யாவுக்கு எதிராக தீர்மானம் போட்ட பாஜக-வை மற்ற கட்சியினரும் கண்டித்து வருகின்றனர். 

From Around the web