மிரட்டும் எஸ்.ஜே. சூர்யா : விஷாலின் மார்க் ஆண்டனி பட டீசர்..!!
Apr 27, 2023, 21:45 IST
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் இப்படம் ஒரு டைம் டிராவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.போன் மூலம் டைம் டிராவலா என்கிற வசனமும் படத்தில் இடம்பெற்று உள்ளது.ஏற்கனவே மாநாடு படத்தில் டைம் லூப்பில் சிக்கி எஸ்.ஜே. சூர்யா செய்த அலப்பறைகளை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
இந்நிலையில், அதேபோன்ற ஒரு கதைகளத்தில் உருவாகி உள்ள மார்க் ஆண்டனி படத்தில் அவர் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.