லியோ படத்தில் நடிக்கும் இர்ஃபான்..!! புகைப்படம் கசிந்தது..!!
பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் படங்களில் யூ-ட்யூப் பிரபலங்கள் இருப்பார்கள். மாஸ்டர் படத்தில் நக்கலைட்ஸ் சேனலில் இருக்கும் பிரபலங்கள் சில காட்சிகளில் நடித்திருந்தனர். அதேபோன்று விக்ரம் படத்தில் வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர் முக்கிய காட்சியில் நடித்து சர்ப்பரைஸ் செய்தனர்.
அந்த வரிசையில் லியோ படத்தில் பிரபல யூ-ட்யூபரும், சாப்பாட்டு விமர்சகருமான இர்ஃபான் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். கதைப்படி லியோ படத்தில் விஜய் ஒரு சாக்லேட் தொழிற்சாலையை காஷ்மீரில் வைத்துள்ளார். அதை ரிவ்யூ செய்யும் யூ-ட்யூப் பிரபலமாக, ‘இர்ஃபான்’ இர்ஃபானாகவே வருகிறார். அவர் ரிவ்யூ செய்யும் போது நடக்கும் களேபரங்கள் சுவாரஸ்யமாக படமாக்கப்பட்டுள்ளன.\
கடந்த ஜனவரி 2-ம் தேதி லியோ படக்குழு காஷ்மீரில் ஷூட்டிங்கை துவங்கியது. அங்கு தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இவ்வார இறுதியில் சென்னைக்கு திரும்பும் படக்குழு, சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு இ.வி.பி கார்டனில் நான்காம் கட்ட ஷூட்டிங்கை துவங்கவுள்ளனர்.
 - cini express.jpg)