நடிகர் ஃபகத் பாசிலின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

 
1

அலட்டல் இல்லாத நடிப்பு, டயலாக் டெலிவரி பாடி லாங்குவேஜ் என ஒவ்வொன்றிலும் வித்தியாசம் காட்டிக் அசதி வருகிறார் நடிகர் ஃபகத் பாசில்.. சமீபத்தில் அவர் நடித்த மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். மாரி செல்வராஜ் படத்தை இயக்கியிருந்தார். அதில் அவர் ரத்தினவேல் என்ற சாதி வெறி பிடித்த கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார் ஃபகத் பாசில். வில்லன் என்றாலே கத்தி பேச வேண்டும்; கத்தியால் வெட்ட வேண்டும் போன்ற டெம்ப்ளேட்டுகளை அசால்ட்டாக உடைத்து தனது மிரட்டலான நடிப்பில் எல்லோரையும் கவர்ந்து விட்டார்.

இதற்கு முன்னதாக தமிழில் அவர் வேலைக்காரன், விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அந்தப் படங்களில் நடித்தபோதே அவர் பிரபலம்தான். ஆனாலும் மாமன்னன் படம் தமிழில் அவருக்கு பெரும் அடையாளத்தை பெற்றுக்க்டொஉத்துவிட்டது. குறிப்பாக அந்தப் படம் ஓடிடியில் வெளியான பிறகு சமூக வலைதளங்கள் முழுக்க ஃபகத் பாசிலே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகை என்று பெயர் எடுத்த நஸ்ரியா நசீமை காதலித்து கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இருவரது திருமண வாழ்க்கையும் சுமுகமாக போய்க்கொண்டிருக்கிறது மேலும் நஸ்ரியாவும் மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி அவருக்கு மொத்தமாக 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.

From Around the web