இலங்கை தொழிலதிபர் மகளை திருமணம் செய்கிறாரா நடிகர் சிம்பு ?

 
1

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பெரிய நட்சத்திரமாக வளர்ந்திருப்பவர் நடிகர் சிம்பு. நல்ல நடிகரான இருக்கும் அவர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர், தயாரிப்பாளர் என முகங்களை கொண்டு செயல்பட்டு வருகிறார். ‘காதல் அழிவதில்லை’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். 

அவர் நடிப்பில் வெளியான கோவில், மன்மதன், வல்லவன், விண்ணைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட்டடித்தன. மிரட்டும் நாயகனாக வலம் வந்த அவர், நயன்தாரா, ஹன்சிகா ஆகிய நடிகைகளுடன் காதல் வயப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் மனமுடைந்த சிம்பு, சில ஆண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கியும் இருந்தார். 

பின்னர் ‘ஈஸ்வரன்’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து மாநாடு, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட மூலம் மீண்டும் ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். இந்நிலையில் நீண்ட நாட்களாக சிம்பு எப்போது திருமணம் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருந்தனர். அது குறித்து மகிழ்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி விரைவில் சிம்புக்கு திருமணம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பெற்றோர் செய்து வருகின்றனர். இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் மகளை சிம்பு திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து முழு அறிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 

From Around the web