நடிகர் அல்லு அர்ஜுன் கைதுக்கு பின்னால் இருப்பது சூழ்ச்சி மற்றும் பகையா? பயில்வான் ரங்கநாதன் ஓபன் டாக்..!

புஷ்பா 2 சிறப்பு காட்சிக்கு சென்ற ரேவதி என்ற இளம்பெண் கூட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த வழக்கில் ஹைதராபாத் போலீஸார் நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்தனர். அவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் பேசி உள்ளார். அல்லு அர்ஜுனுக்கும் ரேவந்த் ரெட்டிக்கும் இடையே மிகப் பெரிய சண்டை நடந்து கொண்டு இருக்கிறது. புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி ஒரே வாரத்தில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை அள்ளி இருக்கிறது. இந்த மகிழ்ச்சியை கூட அல்லு அர்ஜுனால கொண்டாட முடியல, அவரது வீட்டில் மாணவர்கள் புகுந்து, கல், ஆசிட் எல்லாம் வீசி ரகளை செய்துவிட்டார்கள். இதனால், அல்லு அர்ஜுன் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கிறார். ஆனால், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜுன் வீட்டில் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்துவிட்டதாக கூறியுள்ளார்.
ஆனால், தாக்குதல் நடத்திய மாணவர்களின் குழுத் தலைவன் ரேவந்த் ரெட்டியின் விஸ்வாசி என்பதையும், இருவரும் எடுத்துக்கொண்ட போட்டோவை அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் என்ன தெரிகிறது என்றால், அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது திட்டமிட்ட சதி என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே முன்பகை இருக்கிறது. அதாவது அண்மையில் நடந்த தேர்தலின் போது அல்லு அர்ஜுன், ரேவந்த் ரெட்டிக்கு எதிராக பிரச்சாரம் செய்துள்ளார். இதுதான் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல்,தெலுங்கானாவில் இருக்கும் தெலுங்கர்கள் அனைவரும் ஆந்திராவிற்கு சென்று செட்டில் ஆகி விடுங்கள் என்று ரேவந்த் ரெட்டி பேசி இருக்கிறார். இது மிகப்பெரிய தவறான பேச்சு இதனால் தேசிய ஒருமைப்பாடு பிரச்சனை ஏற்படக்கூட வாய்ப்பிருக்கிறது. இது எதுவுமே தெரியாமல் ரேவந்த் ரெட்டி பேசியிருக்கிறார்.இந்த விபரீதமான பேச்சுக்காக ராணுவமே உள்ளே வரலாம் அந்த அளவிற்கு அவருடைய பேச்சு தவறானது. அல்லு அர்ஜுன் மீது இருக்கும் கோவத்தை ரேவந்த் ரெட்டி அவர்கள் தெலுங்கு சினிமா நடிகர்கள் மீது ஏன் காட்டுகிறார். இந்த விஷயத்தில் தமிழ் நடிகர்கள் யாரும் இதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை, அதற்கு காரணம் என்னவென்றால் தமிழ் நடிகர்கள் நடிக்கும் படங்கள் தெலுங்கானாவில் ஓட வேண்டும் என்பதற்காக தமிழ் நடிகர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.