சினிமாவிற்கு எண்டு கார்டு போடுகிறாரா அமலா பால்..?

 
1

தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் அமலாபால். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான கடவர் வெப் சீரிஸ் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற்றது.

தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமாகி தனக்கென்று தனி இடத்தைப் பிடித்த அவர் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்தனர். 

ஒரு சமயத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த அமலாபால், தெய்வத்திருமகள், தலைவா போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்தார். பின்னர் படுகிளாமரான காட்சிகளிலும் நடிக்க துவங்கினார்.அதற்கு உதாரணமாக ஆடை படத்தில் துளியும் ஆடை இல்லாமல் தனது துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

AMALA

இந்நிலையில் நடிகை அமலாபால் கடந்த சில மாதங்களாகவே ஆன்மீகத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் பழனி முருகன் கோவிலுக்கு சென்றுவந்த அமலாபால் இப்போது இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள ஆசிரமத்துக்கு சென்று தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது..

இப்படி தொடர்ந்து அமலாபால் ஆன்மீகத்தில் அதிக கவனம் செலுத்தி வருவதால் சினிமாவிற்கு எண்டு கார்டு போட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து அமலாபால் தரப்பில் இருந்து எந்த தகவலும் இல்லை.

From Around the web