முடிவுக்கு வருகிறதா பாக்கியலட்சுமி சீரியல்..? வெளிவந்த உண்மை..!
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராமமூர்த்தியின் 80வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், அதற்கு எழில், அமிர்தா, நிலாவும் வந்திருந்தார்கள். இதனால் பாக்கியா மிகவும் சந்தோஷப்பட்டதோடு ஒரு பக்கம் கவலையும் பட்டார். அதுபோலவே ராமமூர்த்தியும் சந்தோஷத்தின் உச்சியிலேயே காணப்பட்டார்.
எனினும் ராமமூர்த்தியின் பிறந்தநாளுக்கு வந்திருந்த கோபி அசிங்கப்பட்டதோடு அங்கு பாக்கியா சிரித்து மகிழ்வதை பார்த்து ஆவேசப்பட்டார். அத்துடன் பாக்யாவுக்கு உன்னால தான் என் குடும்பம் என்னை விட்டு பிரிந்தது என்று தகராறும் பண்ணினார்.
இதைத்தொடர்ந்து ராமமூர்த்தி வீட்டிற்கு வந்தும் எல்லாருடனும் சேர்த்து பேசி எல்லாருக்கும் அட்வைஸும் கொடுத்திருந்தார். இன்றைய எபிசோடில் ராமமூர்த்தி உயிரிழந்த சம்பவம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தி கேரக்டர் நடித்துக் கொண்டிருந்தவர் தான் ரோசரி. இவர் அளித்த பேட்டியில், ஆரம்பத்தில் எனக்கு ஏன் இந்த திடீர் முடிவு என்றுதான் தோணுச்சு. இந்த தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்குவதை சொன்னாங்க கதைப்படி ராமமூர்த்தியின் கேரக்டர் முடிவடைதுன்னும் சொன்னாங்க.
அதனால வேற வழி இல்ல. நல்ல பாசிட்டிவான கேரக்டர் முடிஞ்சது எனக்கு வருத்தமாகத் தான் இருக்கு. மேலும் கதைப்படி ராமமூர்த்தியின் கதாபாத்திரம் முடியறது சொன்னாங்க இதுக்கு எதுக்கு நேரில் வர சொன்னிங்க என்று கேட்கும் போது தான் இறுதிச் சடங்கு எல்லாமே ரியலா பண்ணனும் என்று சொன்னாங்க நானும் ஓகே சொல்லிட்டேன் என கூறியுள்ளார்.