பிக்பாஸ் சீசன் 5 ஆரம்பிக்கலாமா..? வெளியானது பிக்பாஸ் தமிழ் ப்ரோமோ..!

 
பிக்பாஸ் தமிழ் சீசன் 5

தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு கால தாமதமாக நடைபெறுகிறது. கடந்தாண்டும் இந்நிகழ்ச்சி கொரோனா பரவல் காரணமாக செப்டம்பர் இறுதி வாரத்தில் துவங்கியது.

அதனால் நடப்பாண்டிலும் இந்நிகழ்ச்சி செப்டம்பர் இறுதி வாரத்தில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. முற்றிலும் கதர் ஆடை அணிந்து கமல்ஹாசன் ஆரம்பிக்கலாமா எனக் கேட்கிறார்

முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில அவர் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்துக்கான டீசர் வெளியானது. அந்த டீசரிலும் கமல்ஹாசன் இதே வார்த்தையை கேட்பார். அதை தொடர்ந்து டீசர் நிறைவடைந்தது.

அதே முறையில் புதிய பிக்பாஸ் சீசனுக்கான முதல் ப்ரோமோ படமாக்கப்பட்டுள்ளது. இந்த ப்ரோமோவை தொடர்ந்து நிகழ்ச்சி துவங்கும் வரை பல ப்ரோமோ வீடியோக்களை தயாரிப்பு நிர்வாகம் வெளியிடவுள்ளது.

புதிய சீசனுக்கு ஏற்றவாறு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முத்திரை மாற்றப்பட்டுள்ளது. அதேபோல நிகழ்ச்சியின் பெயருக்கான ஸ்டைலும் மாற்றப்பட்டுள்ளது. இந்த விஷயங்களும் ப்ரோமோவில் கவனமீர்க்கின்றன.
 

From Around the web