மீண்டும் இணைகிறதா கேப்டன் மில்லர் கூட்டணி..? 

 
1

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படம் ‘கேப்டன் மில்லர்’. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார்.

சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கேன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் – அருண் மாதேஸ்வரன் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


 


 

From Around the web