கைக்கோர்க்க வந்த ரன்வீரை தட்டிவிட்ட தீபிகா படுகோனே..!!

மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கைக் கோரிக்க வந்த ரன்வீர் கையை அவருடைய மனைவியும் நடிகையுமான தீபிகா கண்டுகொள்ளாமல் நடந்த சென்ற வீடியோ ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
deepika padukone

பாலிவுட் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளில் முக்கியமானவர்கள் தீபிகா படுகோனே - ரன்வீர் கபூர். கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘கோலியாங்கி ராஸ்லீலா ராம்லீலா’ படத்தில் இருவரும் முதன்முதலாக இணைந்து நடித்தனர். அதை தொடர்ந்து ‘பாஜிராவ் மஸ்தானி’, ‘பத்மாவதி’ உள்ளிட்ட 3 படங்களில் தொடர்ந்து நடித்தனர்.

இதன்மூலம் இருவருக்கும் இடையில் காதல் உருவாகி, 6 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தனர். அதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அதை தொடர்ந்து 2021-ம் ஆண்டு வெளியான ‘83’ மற்றும் 2022-ம் ஆண்டு வெளியான ‘சர்க்கஸ்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர்.

கடந்த சில மாதங்களாகவே இருவருக்குமிடையில் மணவாழ்க்கை சரியில்லை என்கிற செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. அதை உறுதிப்படுத்தும் விதமாக, கடந்த மார்ச் 13-ம் தேதி நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நடிகை தீபிகா படுகோனே மட்டும் தனியாக பங்கேற்று இருந்தார். அவருடன் ரன்வீர் வரவில்லை.

அதேபோன்று மும்பையில் நேற்று முன்தினம் நடந்த தனியார் நிகழ்ச்சிக்கு தீபிகா படுகோனே மற்றும் ரன்வீங் சிங் வந்திருந்தனர். அப்போது காரில் இருந்து இறங்கியதில் இருந்து தீபிகாவின் கையை பிடிக்க முயன்றார் ரன்வீர். ஆனால் அதை தீபிகா கண்டுகொள்ளவில்லை. இதனால் கோபமடைந்த அவர், சிவப்பு கம்பள வரவேற்பில் போட்டோக்களுக்கு கூட போஸ் கொடுக்காமல் முன்னே சென்றுவிட்டார்.

இதனால் இருவரும் விரைவில் பிரியவுள்ளதாக மும்பை ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு மன அழுத்தம் காரணமாக தீபிகா படுகோனே சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரன்வீர் உடனான பிரச்னையால் தான், தீபிகாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறப்பட்டது. 

இதனால் இருவரும் பிரிவது உறுதி என்று பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் ரன்வீர் சிங் பிங்க் நிற உடையணிந்து ஒரு புகைப்படத்தை சமூகவலைதள பக்கத்தில் பதிவேற்றி இருந்தார். அதற்கு  தீபிகா ‘எடிபிள்’ என்று கமெண்டு செய்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக ரன்வீர் முத்த எமோஜி ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதனால் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே விவாகரத்து பெறவுள்ளதாக வெளியான வதந்திக்கு முற்றிப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 
 

From Around the web