தனுஷ் படத்தில் நடிக்கிறேனா..? ‘உபென்னா’ கீர்த்தி ஷெட்டி விளக்கம்..!

 
நடிகை கீர்த்தி ஷெட்டி

தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிப்பதால வெளியன தகவல் குறித்து உபென்னா நடிகை கீர்த்தி ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான ‘உபென்னா’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமான கீர்த்தி ஷெட்டிக்கு தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் உருவாகினர்.

ஒரே படத்தின் மூலம் தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறிவிட்டடார் கீர்த்தி ஷெட்டி. அதை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தில் அவர் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை பாலாஜி மோகன் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தமிழில் அறிமுகமாவது தொடர்பாக கீர்த்தி ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார். அதில் நிறைய படங்களில் இருந்து எனக்கு அழைப்பு வந்துள்ளது. அவற்றில் தற்போதைக்கு மூன்று படங்களில் மட்டுமே நடிக்கிறேன் என பொதுவாக தெரிவித்துள்ளார்.

அவர் நடிக்கும் இரண்டு படங்கள் தெலுங்கில் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டன. அதனால் கீர்த்தி ஷெட்டியின் மூன்றாவது படம் தனுஷ் நடிக்கும் படமாகத்தான் இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

From Around the web