மீண்டும் பள்ளி மாணவனாக நடிக்கிறாரா தனுஷ் ? தனுஷின் புதிய போஸ்டர் வெளியீடு 

 
1

தனுஷ் முதல்முறையாக நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.தனுஷ் படத்திற்கு தமிழில் வாத்தி என்றும், தெலுங்கில் சார் என்றும் தலைப்பு வைத்துள்ளது படக்குழு.

வாத்தி படத்தை நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரிக்கிறார்கள். வாத்தி படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். நடிகை சம்யுக்தா மேனன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.  கல்வியை தனியார் மயமாக்குவதற்கு எதிராக போராடும் இளைஞனின் கதை இது என சொல்லப்படுகிறது.

மாஸ்டர் படம் ரிலீஸானதில் இருந்து விஜய்யை தான் வாத்தி என்று ரசிகர்கள் அழைத்தார்கள். இனி வாத்தி என்றால் அது விஜய் அல்ல தனுஷ் தான் என்று அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.தனுஷின் புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில் அவர் வாத்தி போல இல்லை. கல்லூரி மாணவன் போல் இருக்கிறார். இளமையான வாத்தி தான்!


 

From Around the web