தனுஷ் படத்தின் OTT விலை இத்தனை கோடியா..?
Jun 25, 2025, 06:35 IST
குபேரா திரைப்படம் ஜுன் 20ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது. மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் தனுஷ் மற்றும் ராஷ்மிகாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் குபேரா திரைப்படம் ஜூலை 18ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அமேசான் பிரைம் நிறுவனம் இப்படத்தின் ஓடிடி உரிமையை ரூ. 47 கோடிக்கு வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 - cini express.jpg)