இயக்குனர் அட்லீயின் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா? 

 
1

இயக்குநர் ஷங்கரின் பயிற்சிப் பட்டறையில் எந்திரன், நண்பன் ஆகியப் படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் அட்லீ.  உணர்வுப்பூர்வமான திரைக்கதைகளை எழுதி, ரசிகர்களின் பல்ஸ் பிடித்து வசனங்களைத் தீட்டி, தனது ஒவ்வொரு படத்தையும் ஹிட்டாக்கி வருபவர். இவர் இயக்கிய ராஜா ராணி திரைப்படம், மெளன ராகத்தின் காப்பி என பலரால் விமர்சிக்கப்பட்டாலும் அட்லீயின் வசனங்கள், காட்சி அமைப்பு, நடிகர்கள் தேர்வு, பாடல்கள் போன்ற பல்வேறு காரணிகளால், படம் அதிரிபுதிரி ஹிட்டாகி ரூ.84 கோடியை வசூலித்தது.

படம் ஹிட்டானதும், சிறு சிறுவேடங்களில் நடித்து வந்த நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம், தெறி. இப்படமும் வியாபார ரீதியில் ரூ.150 கோடியை வசூலித்தது.இதனைத்தொடர்ந்து நடிகர் விஜய் தனது அடுத்த படத்தின் கால்ஷீட்டை அட்லீக்கு ஒதுக்கினார். மதுரைப்பின்னணியில், நடிகர் விஜயை வைத்து, அட்லீ இயக்கிய படம் தான், மெர்சல். இப்படமும் கமர்ஷியலாக சக்கைப்போடுபோட்டது. ஆம், மெர்சல் ரூ.250 கோடியை வசூலித்தது.

விஜய் – அட்லீ காம்போவில், இரண்டு படங்கள் ஹிட்டாகிய நிலையில், தனது அடுத்த படத்தின் கால்ஷீட்டையும் அட்லீக்கு கொடுத்தார், நடிகர் விஜய். மூன்றாவது முறையாக இணைந்த காம்போ, கால்பந்து பின்னணியைக் கதையாக கொண்டு பிகில் என்னும் படமாக உருவானது. ஆனால், இப்படம் ஆவரேஜாகத்தான் ஓடியதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர். தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் தரப்பும் நஷ்டப்பட்டுவிட்டதாக, கோலிவுட்டில் டாக் ஓடியது. ஆனால், ரூ.300 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் என சினிமாவின் முக்கியப்புள்ளிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அடுத்த படவாய்ப்புகள் இன்றி அமைதியாக இருந்த அட்லீ, பாலிவுட்டில் கடந்த நான்கு ஆண்டுகளாக சரியான ஹிட் படங்கள் வெளியாகாமல் இருப்பதை யூகித்து, பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கு கதை தயார் செய்யத்தொடங்கினார். எங்கெங்கோ ஸ்கெட்ச்போட்டு, அப்பாயின்மென்ட் பெற்று ஷாரூக்கானை மீட் செய்து,மிகவும் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் ஆங்கிலத்தில் கதையினை நேரடிவ் செய்து காட்டி இருக்கிறார். அதனையடுத்து படம் டேக் ஆஃப் ஆனது. அண்மையில் அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் ரிலீஸ் ஆன ஜவான் அனைத்து மொழிகளிலும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இன்றைய நிலவரப்படி, ரூ.1000 கோடியை ஜவான் திரைப்படம் எட்டிவிட்டது.

இந்நிலையில் அட்லீயின் பிறந்தநாளில், அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதைப் பலர் இணையத்தில் தேடி வருகின்றனர். அதன்படி ராஜாராணி திரைப்படத்துக்கு அட்லீ பெற்ற சம்பளம் ரூ.20 லட்சம் எனவும்; தெறி படத்தில் அட்லீ பெற்ற சம்பளம் ரூ. 3 கோடி; மெர்சல் படத்துக்கு ரூ. 8 கோடியும்; பிகில் படத்துக்கு ரூ. 15 கோடியும் சம்பளமாகப்பெற்றுள்ளார், அட்லீ. கடைசியாக, ஜவான் படத்துக்கு மட்டும் ரூ.40 கோடி அட்லீக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதன்மூலம் சராசரியாக ரூ.60 கோடி சொத்துக்களை அட்லீ தன் வசம் வைத்திருப்பார் எனக்கூறுகின்றனர், கோலிவுட் வட்டாரங்கள்.

From Around the web