கேம் சேஞ்சர் படம் வெற்றியா ? தோல்வியா..? திரை விமர்சனம் இதோ..!  

 
1

கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண் தன்னுடைய சொந்த ஊரான விசாகப்பட்டினத்திற்கு மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்கிறார். பதவி ஏற்ற உடனேயே ஊழல்வாதிகளை களை எடுக்கிறார். இது எஸ் ஜே சூர்யாவிற்கு பிடிக்கவில்லை. எனவே தன்னுடைய ஒவ்வொரு ஊழலுக்கும் தடையாக இருக்கும் ராம் சரணை தீர்த்து கட்ட முடிவு செய்கிறார். அதன்படி முதல்வர் பதவிக்காக தன்னுடைய தந்தையை கொள்ள முயற்சிக்கிறார். எனவே மகனின் சூழ்ச்சியை அறிந்த சத்தியமூர்த்தி ( ஸ்ரீகாந்த்) ராம் சரணை தனது வாரிசாக அறிவித்து விடுகிறார்.

கேம் சேஞ்சரா? கேம் ஓவரா?.... திரை விமர்சனம் இதோ!

இதன் பின்னர் ராம்சரணுக்கும் எஸ்.ஜே. சூர்யாவிற்கும் இடையில் மோதல் ஏற்பட தொடங்குகிறது. இதன் பின்னர் இந்த மோதலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் அவர் எப்படி வெற்றி பெறுகிறார் என்பது தான் ட்விஸ்ட். அதாவது ராம் நந்தன் யார்? அவருடைய பிளாஷ்பேக் என்ன? ஏன் சத்தியமூர்த்தி ராம் நந்தனை தனது வாரிசாக அறிவித்தார்? என்பதுதான் கேம் சேஞ்சர் படத்தின் மீதிக் கதை.

நாளை வெளியாகும் 'கேம் சேஞ்சர்' பட டிரைலர்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இயக்குனர் சங்கர் பெரும்பாலும் தன்னுடைய படங்களில் அரசியல் பற்றியும் சமூக கருத்துக்களையும் சொல்லும் கதையை கையில் எடுப்பார். அதன்படி இவர் நேரடியாக தெலுங்கு திரைப்படத்தை இயக்கியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் கேம் சேஞ்சர் படத்தின் திரைக்கதை மந்தமாக அமைந்து ரசிகர்கள் மத்தியில் எந்தவித ஈர்ப்பும் இல்லாமல் ஆக்கிவிட்டது. வழக்கமான சங்கர் படங்களை போல் பிரம்மாண்டங்கள் ரசிகர்களை கவர்ந்தாலும் திரைக்கதை சுவாரஸ்யமாக நம்ப வரவில்லை. கதையானது விறுவிறுப்பாக சென்றாலும் அதில் எந்தவித திருப்பங்களும் பரபரப்பான காட்சிகளும் இல்லை. இருப்பினும் இசையமைப்பாளர் தமனின் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. குறிப்பாக ஜரகண்டி பாடல் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

'கேம் சேஞ்சர்' படத்தின் 'ஜரகண்டி' பாடல் குறித்து பேசிய எஸ்.ஜே. சூர்யா!

திருநாவுக்கரசின் ஒளிப்பதிவு அருமையாக அமைந்திருக்கிறது. மேலும் கமர்சியல் விரும்பிகளுக்கு இந்த படம் ஏற்ற படம் தான். ஆனால் என்னதான் இருந்தாலும் முதல்வன், சிவாஜி போன்ற படங்களில் இருந்த ஷங்கரின் மேஜிக் இந்த படத்தில் சுத்தமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். எனவே இந்த படம் கேம் சேஞ்சர் இல்லை கேம் ஓவர், நம்மள முடிச்சு விட்டீங்க போங்க என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

From Around the web