சீரியல் விட்டு விலகுகிறாரா கோபி.? இனிமேல் நான் பாக்கியலட்சுமி தொடரில் இல்லை..! 

 
1

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் பாக்கியலட்சுமி சீரியல்.இத்தொடருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர் என்று தான் சொல்லவேண்டும்…

சமீபத்தில் அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் இறந்துவிட்டதாக சொல்லப்பட்டது, ஆனால் அவர் திடீரென உயிரோடு வந்த கதைக்களத்தை மக்கள் சுத்தமாக வெறுக்கிறார்கள்…TRP-யும் மொத்தமாக கம்மி ஆகிவிட்டது…

இப்போது பாக்கியா பாட்டி இனியா செல்வி என 4 பேரும் சென்னை திரும்பியதும் எழில்-அமிர்தா-கணேஷ் பிரச்சனை தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எப்போதும் ஜாலியான விஷயங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிடும் நடிகர் சதீஷ் இப்போது ஒரு புது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்….அதில் அவர் மீண்டும் தான் இந்த கேரக்டரில் ரொம்ப நாட்கள் தொடர்வேனா என்று தெரியாது என்பது போல பேசினார்.

நான் ட்ரை பண்றேன் மறுபடியும் உங்க அன்புக்கு எல்லாம் ரொம்ப நன்றி…நம்ம கஷ்டப்பட்டு நாலு காசு சம்பாதிச்சு அதை வீட்டுக்கு கொண்டுட்டு போவதற்குள் படாத பாடு பட வேண்டி இருக்கு.பல அவமானங்களை சந்திக்க வேண்டியது இருக்கு நாம நடிக்கிறோம் என்பதை மறந்து நம்முடைய நிஜ கேரக்டர் இதுதான் என்று பலர் அசிங்கமாக திட்டுகின்றனர் என சோகமான விஷயத்தை பகிர்ந்துள்ளார். 

இதனால் இவர் விரைவில் சீரியல் விட்டு வெளியேறி விடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இருந்தும் இது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை  

From Around the web