'பாக்யலட்சுமி' சீரியலில் இருந்து விலகுகிறாரா கோபி ? அவரே வெளியிட்ட வீடியோ..!! 

 
1

இல்லத்தரசிகளின் மிகுந்த கவனம் பெற்ற சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது விஜய் டிவியின் 'பாக்யலட்சுமி' சீரியல். கணவன், மனைவியான கோபி மற்றும் பாக்கியா இடையே நடைபெறும் அதிரடி திருப்பங்களை வைத்து இந்த சீரியல் நகர்ந்து வருகிறது. கணவன் தன்னை விட்டு பிரிந்த நிலையிலும் தனியாக நின்று குடும்பத்தை பாக்கியா காப்பாற்றி வருகிறார். 

baakyalakshmi

தற்போதைய கதைப்படி தனது வீட்டை காலி செய்யும்படி கோபி நெருக்கடி கொடுக்கும் நிலையில் தானே வாங்கிக் கொள்வதாக பாக்யா சவால் விடுகிறார். இதற்காக கடுமையாக உழைத்து வரும் பாக்யா, எதிர்பாராத விபத்தில் சிக்குகிறார். அப்போது பாக்யாவை காப்பாற்றும் நபராக பழனிச்சமி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரஞ்சித் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார். 

baakyalakshmi

இனி பாக்யாவுக்கு ஆதரவாக இருக்கும் கதாபாத்திரமாக பழனிச்சாமி கதாபாத்திரம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ரஞ்சித்தின் வருகையால் நடிகர் சதீஷ் வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இது குறித்து விளக்கமளித்து சதிஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாக்யலட்சுமி சீரியல் ப்ரோமோவை அனைவரும் பார்த்திருப்பீர்கள். நீங்கள் காட்டும் அன்புக்கு நன்றி. இப்போது சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள ரஞ்சித் சாருக்கு அதே அன்பு காட்டுவீர்கள் என்று நம்புகிறேன். இந்த தொடரில் கோபியின் கதாபாத்திரம் குறையவிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகள் உங்களுடன் பயணித்துள்ளேன். வயதாகிவிட்டது கொஞ்ச நாள் ஓய்வெடுக்க உள்ளேன் என்று கூறினார். 


 


 

From Around the web