இப்படியும் ஒரு ரசிகரா ? 1 லட்சம் கொடுத்து லியோ பட டிக்கெட்டை வாங்கிய ரசிகர்..!

 
1

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் லியோ. இந்த திரைப்படம் நேற்று தமிழகத்தில் வெளியான நிலையில், இதற்கு முன்னதாகவே தியேட்டர் முன் குவிந்த விஜய் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், மேள தாளங்கள் முழங்க தியேட்டர் முன் ஆடிப்பாடியும் லியோ படத்தை கொண்டாடினர். 

அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சத்தியபாமா திரையரங்கில் நேற்று காலை முதல் காட்சி ரசிகர்கள் ஷேவாக  திரையிடப்பட்டுள்ளது. இந்த காட்சியின் முதல் டிக்கெட்டை கோவில்பட்டி சென்ட்ரல் லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர் செல்வின் சுந்தர் என்பவர் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து ஒரு ரூபாய்க்கு வாங்கியுள்ளார். 

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்று வரும் இலவச கல்வி பயிலகத்திற்கு வழங்கும் வகையில் இவ்வளவு விலை கொடுத்து வாங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். 

From Around the web