வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதில் இவரா ?

 
1

நடிகர் சூர்யா இயக்குநர் பாலாவுடன் இணைவதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக, சூர்யா- பாலா கூட்டணியில் வெளிவந்த நந்தா மற்றும் பிதாமகன் போன்ற திரைப்படங்கள் உருவாகி பெரும் வெற்றிப்பெற்றன. இந்த வெற்றிப்பயணம் மீண்டும் தொடருமேன ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 

மேலும்,  சூர்யா- பாலா கூட்டணியில் உருவாகயிருந்த திரைப்படத்திற்கு ‘வணங்கான்’ என்று பெயர் வைக்கப்பட்டது. ஆனால், இப்படத்தின் படப்படிப்பு ஆரம்பித்ததில் இருந்து இயக்குநர் பாலாவுக்கும் – நடிகர் சூர்யாவுக்கும் கருத்து வேறுபாடு அதீதமாக ஏற்படுவதாக அவ்வபோது தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. 

இதைத்தொடர்ந்து, ‘வணங்கான்’ திரைப்படம் நின்று விட்டதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால், இது குறித்து படக்குழு எந்தவித தகவல்களையும் தெரிவிக்காமல் இருந்த நிலையில், சமீபத்தில், இயக்குநர் பாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன்படி,  கதையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக தம்பி சூர்யா படத்திலிருந்து விலகிக் கொள்கிறார். இது இருவரும் இணைந்து எடுத்த முடிவு என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், வணங்கான் திரைப்படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்றும், படத்திற்கான தோற்ற புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web