இர்ஃபானின் மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

 
1

சினிமாவில் நுழையாமலே பிரபலம் அடைந்தவர்களில் ஒருவராக இர்ஃபான் காணப்படுகின்றார். இவர் விதவிதமான சாப்பாட்டு வீடியோக்களை பதிவேற்றி அதன் மூலம் நிறைய சப்ஸ்க்ரைபர்களை சம்பாதித்த இவர், சாப்பிடாத உணவே இல்லை என்று சொல்லலாம்.

விதவிதமான உணவுகளை மட்டும் இல்லாமல் விதவிதமான இடங்களுக்கும் நாடுகளுக்கும் சென்று அங்கேயும் உணவுகளை உண்டு ரிவ்யூ கொடுத்து தற்போது தனது youtube சேனலில் பல மில்லியன் கணக்கான சப்ஸ்கிரைப்களை உருவாக்கியுள்ளார்.

ஒரு கட்டத்தில் செலிப்ரேட்டியாக மாறிய இவர் பிரபலங்கள் பலரையும் பேட்டி எடுத்தார். அதிலும் உணவு பிரதானமானதாக காணப்பட்டது. அப்படி பதிவிட்ட வீடியோக்கள் ஹிட்டாக காலப்போக்கில் இவரும் செலிபிரிட்டியாக மாறினார். அமெரிக்காவுக்குச் சென்று நெப்போலியன் மகனது திருமண வீட்டிலும் வீடியோ எடுத்து போட்டார்.

இந்த நிலையில், யூட்யூபர் இர்ஃபானின் சொத்து மதிப்பு பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கின்றார் என்றும், அவரது  சொத்து மதிப்பு மொத்தமாக மூன்று கோடியிலிருந்து 5 கோடி வரை இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. மேலும் சென்னையில் அவருக்கு பல கோடி மதிப்புள்ள வீடும் மூன்று சொகுசு காரும் உள்ளதாம்.

From Around the web