எனக்கே தெரியாமல் நான் நடிக்கும் படமா..? அதிர்ந்து போன கவுதம் மேனன்..!

 
அன்புச் செல்வன் பட போஸ்டர்

இயக்குநராகவும், நடிகராகவும் வெற்றி நடைப் போட்டு வரும் கவுதம் மேனன் தன்னுடைய சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

கடந்த 2003-ம் ஆண்டு சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான படம் ‘காக்க காக்க’. இந்த படத்தில் சூர்யாவின் பெயர் அன்புச் செல்வன். கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்த படம் அன்றைய ஆண்டின் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி அடைந்தது.


இந்த படத்தில் ஹீரோ சூர்யா கதாபாத்திரத்தின் ’அன்புச் செல்வன்’ என்கிற பெயரை தலைப்பாக கொண்டு திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. இதில் கவுதம் மேனன் கதாநாயகனாக நடிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படத்தின் போஸ்டரை பா. ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதை ரீ-ட்வீட் செய்துள்ள இயக்குநர் கவுதம் மேனன், இந்த படம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. . இப்படியொரு சம்பவத்தை  எளிதாகச் செய்ய முடியும் என்பது அதிர்ச்சியாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

From Around the web