இப்படி ஒரு கசப்பான அனுபவமா..! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிற்கு நடந்த கொடுமை…!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது அதிகமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். பல படங்கள் சரியாக போகவில்லை என்றாலும் நல்ல முயற்சியை எடுத்து வருகிறார் அதற்கு அனைவருமே பாராட்டி வருகின்றனர்..
சமீபத்தில் இவர் நடிப்பில் சொப்பன சுந்தரி மற்றும் பர்ஹானா போன்ற படங்கள் வெளியானது அதில் அவருக்கு வரவேற்பு இருந்தாலும் பெரிய வசூல் தரவில்லை…இந்த படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்..
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், தனக்கு நடந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
அந்த பேட்டியில் பேசிய அவர் நான் கல்லூரி படிக்கும்போது என்னுடைய தோழி வீட்டுக்கு சென்றுவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பினேன்.அந்த ஆட்டோவில் ஒரு நபர் என் அருகில் நெருங்கி வந்தார் எனக்கு அப்போது பதட்டமாக தான் இருந்தது.
ஒரு கட்டத்தில் என் மீது தவறாக கைவைத்தார்…நான் உடனடியாக ஆட்டோவை நிறுத்த சொல்லிட்டு என்ன அண்னா இது போன்ற ஆட்களை ஆட்டோவில் ஏன் ஏற்றுகிறீர்கள் என கேட்டேன்.அப்போது ஆட்டோ ஓட்டுநர் அந்த நபரை திட்டி வண்டியில் இருந்து இறக்கிவிட்டதாக ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்…
இப்படி பல பெண்கள் தங்களுக்கு நடப்பதை மறைத்து வருகின்றனர் அப்படி இல்லாமல் தைரியமாக இருக்குங்கள் என்றுள்ளார் ஐஸ்வர்யா.