இது உண்மையா ? பிரேம்ஜிக்கும் அவரது மாமியாருக்கும் ஒரே வயசா?

 
1

பிரேம்ஜி 45 வயது முரட்டு சிங்கிளாக இருந்த நிலையில் ஒரு வழியாக திருமணம் செய்து விட்டதை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு நிம்மதியை தந்துள்ளது. கொரோனா வைரஸ் காலத்தில் தான் இந்துவை பிரேம்ஜி முதன்முதலில் சந்தித்ததாகவும் இருவரும் முதலில் நட்பாக பழகிய நிலையில் அதன் பின் அது காதலாக மாறி இரு வீட்டார் சம்பந்தத்துடன் தற்போது திருமணம் நடந்துள்ளது.

இந்த நிலையில் தான் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பிரேம்ஜிக்கும் இந்துவுக்கும் வயது வித்தியாசம் 20 என்று கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி இந்துவின் அம்மாவுக்கும் பிரேம்ஜிக்கும் ஒரே வயது என்றும் அதாவது மாமியாருக்கும் மருமகனுக்கும் ஒரே வயது என்று அவர் கூறியிருப்பது தான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சியாக உள்ளது.

மேலும் இந்த திருமணத்திற்கு இளையராஜா மட்டுமின்றி வெங்கட் பிரபுவின் மனைவியும் வரவில்லை என்று அந்த பத்திரிகையாளர் கூறியிருப்பதை பார்க்கும்போது வீட்டில் உள்ள அவருக்கு இந்த திருமணத்தில் சம்மதம் இல்லையா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் பிரேம்ஜி மற்றும் இந்து ஆகிய இருவரும் காதலித்து ஒருமனதாக திருமணம் செய்து கொண்டிருப்பதால், வேறு யாருடைய சம்மதமும் தேவையில்லை, இருமனம் ஒருமனமாகி இருவரும் சந்தோஷமாக வாழ்வார்கள் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

From Around the web