இது உண்மையா ? இனி ஒரு திரைப்படம் வெளியாகி 48 மணி நேரம் கழித்து தான் விமர்சனம் செய்ய வேண்டும்..!

 
1
ஒரு திரைப்படம் வெளியானால் அந்த படத்தின் ஆரம்ப காட்சிகள் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் போது விமர்சனங்கள் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஒரு மொபைல் போன், ஒரு கேமரா இருந்தால் போதும் உடனே நானும் ஒரு விமர்சகர் என யூடியூபில் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும் நல்ல படத்தை  கூட மோசமான படம் என்றும் மோசமான படத்தை கூட நல்ல படம் என்றும் போலியாக விமர்சனம் செய்வது பேஷன் ஆக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரு சிலர் பணம் கொடுத்தால் நல்ல முறையில் விமர்சனம் செய்வதும் பணம் கொடுக்க மறுத்தால் மோசமாக விமர்சனம் செய்யும் வழக்கத்தையும் கொண்டிருக்கும் நிலையில் விமர்சகர்களை கட்டுப்படுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் இது குறித்த வழக்கு கேரளா உயர்நீதிமன்றத்தில் நடந்த நிலையில் ஒரு திரைப்படம் வெளியாகி 48 மணி நேரம் கழித்து தான் விமர்சனம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் அமைத்த குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து இது உத்தரவாகவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே கேரளாவில் இனி ஒரு திரைப்படம் வெளியானால் இரண்டு நாட்கள் கழித்து தான் விமர்சனம் வெளியிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் தமிழ் சினிமா விமர்சனத்திற்கும் இதே போன்ற ஒரு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது.

From Around the web