இது உண்மையா ? விஜய்யுடன் நடிக்க மறுத்த சாய் பல்லவி….!! 

 
1

பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்து ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் நடிகை சாய் பல்லவி. அதைத்தொடர்ந்து தமிழில் தனுஷின் மாரி 2, சூர்யாவின் என்ஜிகே ஆகிய படங்களில் நடித்தார். மேலும் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியபடுத்தி இருந்தார் சாய் பல்லவி.

விஜய்யுடன் நடிக்க மறுத்த சாய் பல்லவி.... எந்த படத்தில் தெரியுமா?

இந்நிலையில் இவர், நடிகர் விஜய் உடன் இணைந்து நடிக்க மறுத்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரூ. 600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது.

விஜய்யுடன் நடிக்க மறுத்த சாய் பல்லவி.... எந்த படத்தில் தெரியுமா?

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் தான் நடிகை சாய் பல்லவியை நடிக்க வைக்க படக்குழு அவரை அணுகியதாம். ஆனால் இந்த கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் அவரை திருப்தி படுத்தவில்லை என்பதால் அவர் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

From Around the web