ரஜினியின் ‘பேட்ட’ படத்தின் தொடர் பாகமா ’ஜகமே தந்திரம்’..?

 
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்

பேட்ட படத்தில் ரஜினிகாந்த் கெட்-அப்பில் ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ளதால், இந்த படம் பேட்ட படத்தின் இரண்டாம் பாகமா என்று எழுந்து வரும் கேள்விக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் டார்க் காமெடி வகை படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பை உருவாக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். மேலும் ஜிகர்தண்டா, இறைவி போன்ற படங்களை இயக்கி அதிலும் கவனமீர்த்தார்.

இவருடைய இயக்கத்தில் அடுத்து வெளிவரவுள்ள படம் ஜகமே தந்திரம். தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் வரும் மே 18-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளிவரவுள்ளது.

இந்த படத்தில் நடிகர் தனுஷின் கெட்-அப்பை பார்க்கும் ரசிகர்கள் பேட்ட படத்தின் இரண்டாவது பாகமா என்று கேள்வி எழுப்புகின்றனர். அதுகுறித்து பேசியுள்ள இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் இல்லை என்று மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள அவர் பேட்ட படத்தின் திரைக்கதையை வைத்து தான் ஜகமே தந்திரம் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது என்று பலரும் கருதுகின்றனர். அவர்களுக்கு என்னுடைய பதில் இல்லை என்பது தான்.

இரண்டு கதைகளும் வெவ்வேறு தளங்களில் பயணிக்கக்கூடியது. நிச்சயம் இது ரசிகர்களை கவரும் வரும் 18-ம் தேதி வெளியாகும் ஜகமே தந்திரம் படத்தை அனைவரும் ஓடிடி-யில் பர்க்கவும் என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

From Around the web