வெப் தொடரில் ஜோதிகா நடிக்கிறாரா ?

 
1

நடிகை ஜோதிகா, மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக ‘காதல்: தி கோர்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து இந்தியில் ‘ஸ்ரீ’ என்ற படத்தில் ராஜ்குமார் ராவுடன் நடிக்கிறார். இப்போது வெப் தொடரில் அவர் அறிமுகமாக இருக்கிறார்.

இந்தியில் உருவாகும் இந்த வெப் தொடர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. ‘தாபா கார்டல்’ (Dabba Cartel) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடரின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.

இதில் ஜோதிகாவுடன் பிரபல இந்தி நடிகை ஷபானா ஆஸ்மி, இந்தி நடிகர் கஜ்ராஜ் ராவ் ஆகியோரும் நடிக்கின்றனர். நெட்பிளிக்ஸ் தளத்துக்காக உருவாகும் இந்தத் தொடரை ‘மார்க்கரிடா வித் ஸ்ட்ரா’ , ‘த ஸ்கை இஸ் பிங்க்’ படங்களை இயக்கிய சோனாலி போஸ் இயக்குகிறார். ஐந்து குடும்பப் பெண்களைப் பற்றிய இந்தக் கதையில் ஜோதிகா, ஷபானா ஆஸ்மி தவிர மேலும் சில நடிகைகளும் நடிக்க இருக்கின்றனர். அவர்கள் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்பட இருக்கிறது.

From Around the web