இனி இந்தியன்- 2 படத்தில் காஜல் அகர்வால் இல்லையா..?

 
காஜல் அகர்வால் மற்றும் ஷங்கர்

ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் மீண்டும் துவங்கப்படும் ‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால் தொடர்ந்து கதாநாயகியாக நடிக்கமாட்டார் என்று தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 2017-ம் ஆண்டு இந்தியன் 2 பட அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் படத்தின் ஷூட்டிங் பணிகள் 2019-ம் ஆண்டு துவங்கின. கடந்த 2020-ம் ஆண்டு சென்னை படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

இதனால் படப்பிடிப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டன. மேலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக படப்பிடிப்பு பணிகள் தாமதமாகின. தொடர்ந்து லைக்கா - ஷங்கர் மோதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக படத்தின் ஷூட்டிங் தாமதமானது.

இதற்கிடையில் நடிகர் விவேக்கின் திடீர் மரணம், காஜல் அகர்வால் திருமணம் என இந்தியன் 2 படத்திற்கு சம்மந்தப்பட்டவர்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டன. இது படத்தின் பணிகளிலும் எதிரொலித்தன. 

இந்நிலையில் ஷங்கர் - லைக்கா இடையே நிலவி வந்த பிரச்னையில் சுமூகம் ஏற்பட்டது. இதையடுத்து விரைவில் ஷூட்டிங் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2 படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதனால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை நீக்கிட ஷங்கர் முடிவு செய்துள்ளாராம். அவருக்கு பதிலாக வேறொரு நடிகையை தேடும் முடிவில் படக்குழு ஈடுபட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பை இந்தியன் 2 படக்குழு வெளியிடும் என தெரிகிறது.
 

From Around the web