கர்ப்பமாக இருக்கிறாரா காஜல்..? வீட்டில் நடந்த விசேஷ சடங்கு..!

 
காஜல் அகர்வால்

காஜல் அகர்வாலுக்கு அவருடைய தாயார் சில விசேஷ சடங்குகள் செய்யும் புகைப்படங்கள்  வெளியானதை தொடர்ந்து, அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் உலா வர தொடங்கியுள்ளன.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் காஜல் அகர்வால், சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது குடும்பத்தினருடன் மும்பையில் வசித்து வருகிறார்.

எனினும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். காஜல் அகர்வால் நடித்துள்ள ஹே சினாமிக்கா, கருங்காப்பியம், கோஸ்ட்டி, பாரிஸ் பாரிஸ் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளிவரவுள்ளன. தெலுங்கில் ஆச்சார்யா மற்றும் தி கோஸ்ட் ஆகிய இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் ஆச்சார்யா படம் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவர் புதிய படங்கள் எதிலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. தற்போது 36 வயதாகும் காரணத்தால் சிறிது காலம் தனிப்பட்ட வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தர அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் காஜலுக்கு அவருடைய தாயார் சில விசேஷ சடங்குகள் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இதனால் அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளிவர தொடங்கியுள்ளன. இந்த செய்தியை காஜல் அகர்வால் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்காத நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

From Around the web